தேவையான பொருட்கள்
சத்துமாவு - 125 கிராம்
முட்டை - 4
மைதா - 125 கிராம்
கோகோ தூள் - 30 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
சுடுதண்ணீர் - 60 மில்லி
வெண்ணெய் - 100 கிராம்
சன்ஃப்ளவர் ஆயில் - 50 மில்லி
சாக்லேட் எசென்ஸ் - 2 ஸ்பூன்
இளஞ் சூடான பால் - 1/2 கப்.
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை சேர்த்து பொடி செய்யவும். முட்டை, உருக்கிய வெண்ணெய் சேர்த்து அரைக்கவும். பால் மற்றும் ஆயில் சேர்த்து நல்ல க்ரீமியா அரைத்து எடுக்கவும். பின்பு கோகோ தூள் உடன் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். மைதா, சத்து மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் சோடா சேர்த்து நன்கு இருமுறை சலித்துக் கொள்ளவும். பின் அடித்து வைத்துள்ள முட்டை கலவையுடன் கோகோ தூள் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு சலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் வெண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி சமப்படுத்தி 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கிய ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். சுவையான சத்துமாவு சாக்லேட் கேக் தயார்.