தேவையானவை
பால் - அரை லிட்டர்
இளசான நுங்கு - 6
ஜவ்வரிசி - 2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - அரை கப்
ஏலத்தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கேற்ப.
செய்முறை:
நுங்கை தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கவும். ஜவ்வரிசியை வேக வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதில் வேக வைத்த ஜவ்வரிசி, சர்க்கரை, நுங்கு சேர்த்து கலந்து ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். சற்று சூடு ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.


