தேவையான பொருட்கள்
நாவல் பழம் 1/4 கிலோ
ரவை 1/4 கிலோ
சர்க்கரை 1/4 கிலோ
ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன்
நெய் 100 கிராம்
முந்திரி திராட்சை தேவைக்கேற்ப
உப்பு ஒரு சிட்டிகை
தேங்காய்ப்பால் 1/2 கப்.
செய்முறை
நாவல் பழத்தை கழுவி கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் அரைத்த நாவல் பழம், ரவைக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, ரவை, ஏலக்காய் சேர்த்து கிளறவும். ரவை வெந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து சர்க்கரை போட்டு கிளறவும். முதல் எடுத்த தேங்காய் பாலை ஊற்றி கிளறவும். முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து போடவும். மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கவும். சுவையான நாவல் பழ கேசரி தயார்.