தேவையான பொருட்கள்
1/2 கிலோ மீன்
1 கைப்பிடி சின்ன வெங்காயம்
1 கைப்பிடி பூண்டு
3 தக்காளி
1/2 கப் தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
2 மேஜை கரண்டி மிளகுத்தூள்
தேவையானஅளவு உப்பு
செய்முறை
பூண்டு வெங்காயம் தக்காளி இவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.வட சட்டியில் கால் கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி இதில் அரைத்த விழுதை சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து சிறு தீயில் 20 நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்கவும்.நன்றாக வதங்கி என்னை தெரிந்து வந்தபின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து இதில் மீன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு மிளகு தூள் மீதி பாதிக்கால் கப் தேங்காய் எண்ணெய் இவற்றில் சேர்த்து கலந்து சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வேக விடவும். சுவையான மிளகு மீன் மசாலா தயார்.