தேவையானவை
ஆட்டு இறைச்சி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது-10 கிராம்
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
மல்லித் தூள்- 2 தேக்கரண்டி
கரம் மசாலா- 1 தேக்கரண்டி
சீரகத் தூள்- அரை தேக்கரண்டி
கத்தரிக்காய் - 100 கிராம்
மஞ்சள் பூசணிக்காய் - 50 கிராம்
கடலைப்பருப்பு - 150 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
கொத்துமல்லி - சிறிதளவு
பட்டை தூள் - 1 தேக்கரண்டி
புளி கரைசல் - சிறிதளவு.
தாளிக்க
எண்ணெய்- தேவைக்கேற்ப
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ தலா- 1 துண்டு
பச்சை மிளகாய்- 2.
செய்முறை:
குக்கரில் நன்கு கழுவிய கடலை பருப்பு, துவரம் பருப்பு போட்டு அதனுடன் மட்டன், மஞ்சள் தூள் சேர்த்து வேக விட்டு எடுக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் கத்தரிக்காய், பூசணிக்காய் சேர்த்து கிளறவும். இதில் இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வேக வைத்து மசித்த பருப்பு, புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு மணம் வந்ததும் பட்டை தூள் சேர்க்கவும். கடைசியில் சிறிது மல்லி இலை தூவி இறக்கிவிடவும்.