தேவையான பொருட்கள்
பட்டர்- 1 கப்.
இறால் - 250 கிராம்.
முட்டை - 4.
பெரிய வெங்காயம் - 2.
தக்காளி - 2.
பட்டை - 2.
கிராம்பு - 3.
பிரிஞ்சி இலை - 2.
சோம்பு - 1 ஸ்பூன்.
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்.
உப்பு - தேவைக்கேற்ப.
கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை:
முதலில் இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை வேக வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி. பின்பு இறாலைச் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். மசாலா நன்றாக திக்கானதும் அதனுடன் பட்டர் மற்றும் வேகவைத்த முட்டைகளைக் குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும். இப்போது சூடான பட்டர் இறால் முட்டை மசாலா தயார்.