தேவையான பொருட்கள்
1கைப்பிடி கடுகு இலைகள்
2உருளைக்கிழங்கு
2வெங்காயம்
2பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு தேவையான அளவு
தாளிக்க :
1 டீஸ்பூன் எண்ணை
1/4 டீஸ்பூன் கடுகு
1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு
1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
செய்முறை:
கடுகு இலைகளை நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், வேகவைத்த உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு செர்ட்க்கு பொரிந்ததும், வெங்காயம், பச்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள கீரை, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு தேவையான uppu, மிளகாய் தூள் கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கினால் கடுகுக்கீரை உருளைக்கிழங்கு கறி தயார்.இப்போது கடாயில் உள்ள கறியை எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றினால் சுவையான, கடுகுக்கீரை உருளைக்கிழங்கு கறி சுவைக்கத்தயார்.