தேவையானவை
மஷ்ரூம் - அரை கப் (நறுக்கியது)
பாஸ்மதி ரைஸ் - 1 கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
வெள்ளை மிளகு - கால் தேக்கரண்டி
சோயாசாஸ் - 1 தேக்கரண்டி
வினிகர் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து பின்னர், சாதமாக வடித்துக் கொள்ள வேண்டும். சாதம் வேக வைக்கும்போதே சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து வேக வைக்கவும். சாதம் ஒட்டாமல் தனித் தனியாக வரும். வடித்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி வைத்து விடுங்கள். பின்னர், மீண்டும் அடுப்பில் ஒரு அடி கனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அந்த வாணலியில் முழுவதும் எண்ணெய் படுமாறு நன்றாக பரப்பி விட்டுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அதில் நறுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் அனைத்தையும் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு நறுக்கி வைத்த மஷ்ரூமை இதில் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு வடித்து ஆற வைத்த சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பிறகு அதில் டார்க் சோயா சாஸ், பெப்பர், சர்க்கரை, உப்பு அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக கிளறினால் போதும். அதிகம் கிளறக் கூடாது. அரிசியும் உடைந்து விடாமல் கிளறி இதன் மேல் ஸ்பிரிங் ஆனியனை தூவி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.


