தேவையானவை
காளான்- 500 கிராம்
பெரிய வெங்காயம் - 3
சீரக தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் நறுக்கியது- 3
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கேற்ப
சோம்பு, கறிவேப்பிலை- சிறிதளவு
பட்டை - ஒரு துண்டு
நறுக்கிய இஞ்சி - 1 சிறு துண்டு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் லேசாக ஊற்றி, கொதிவரும் போது உப்பு, வெட்டி வைத்திருக்கும் காளான் சேர்த்து சுண்ட வதக்கி இறக்கிவிடவும். இதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்.