தேவையான பொருட்கள்:
தயிர்-1 கப்.
அரிசி மாவு-1 கப்.
உப்பு-தேவையான அளவு.
தேங்காய் எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
மோர் மிளகாய்-2
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
செய்முறை:
முதலில் பவுலில் 1 கப் தயிரை எடுத்துக்கொண்டு அதில் 4 கப் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். இப்போது இதில் அரிசி மாவு 1 கப் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு கடுகு1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, மோர் மிளகாய் 2, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு இதில் கரைத்து வைத்திருக்கும் மோரை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். இதில் நடுவே தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி கிண்டவும். மோர்களி நன்றாக கெட்டியாகி வரும். இதை அப்படியே சூடாக எடுத்து பரிமாறலாம் அல்லது ஆறிய பிறகு துண்டு துண்டாக வெட்டி பரிமாறலாம்.


