தேவையானவை:
பயத்தம் பருப்பு - 1 கப்,
பால் பவுடர் - 1 கப்,
பவுடராக்கிய சர்க்கரை - 1 கப்,
முந்திரி துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்,
ஏலப் ெபாடி - 1 டீஸ்பூன்.
செய்முறை:
பயத்தம்பருப்பை கழுவி துணியில் உலர்த்தி முக்கால் பதம் காய்ந்ததும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பவுடராக்கவும். வெறும் வாணலியில் முந்திரியை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பவுடராக்கிய பயத்தம் பவுடர், வறுத்த முந்திரி, ஏலப்பொடி, பால் பவுடர், சர்க்கரை பவுடர் அனைத்தையும் சேர்த்து கலந்து ஆறியதும் ஒரு ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு மூடி வைக்கவும். தேவைப்படும் போது வாணலியில் ¼ கப் நெய்யை ஊற்றி 2 கப் மூங்தால் அல்வா ப்ரிமிக்ஸ் சேர்த்து லேசாக வறுத்து 3 கப் வெந்நீரை ஊற்றி கைவிடாமல் கிளறினால் அல்வா தயார்.

