தேவையானவை:
ஊற வைத்த கடலைப் பருப்பு - 1 கப்,
ஊறவைத்த உளுத்தம் பருப்பு - ½ கப்,
பாசிப்பருப்பு - ¼ கப் (ஊறவைத்தது),
காய்ந்த மிளகாய் - 5,
புதினா - 1 கட்டு (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - 1 பெரிய துண்டு (பொடியாக நறுக்கியது),
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
பெருங்காயத் தூள் - ½ டீஸ்பூன்.
செய்முறை:
ஊறவைத்த கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் அரைக்கவும் (கரகரப்பாக), உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பாசிப்பருப்பை அரைக்காமல் அரைத்த மாவில் சேர்க்கவும். நறுக்கிய புதினா, இஞ்சியையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கி காய்ந்த எண்ணெயில் வடைகளாக தட்டிப்போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


