தேவையானவை:
புதினா - 2 கட்டு,
வெந்தயம் - 1 ஸ்பூன்,
புளி - குழம்புக்கு ஏற்ற அளவு,
மிளகு - 2 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
பெருங்காய தூள் - ¼ ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6,
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ½ கப்,
நெய் - 1 ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - 1 டீஸ்பூன்.
செய்முறை:
புதினா, கறிவேப்பிலை இரண்டையும் சுத்தம் செய்து வைக்கவும். புதினா, கறிவேப்பிலை தவிர மேலே குறிப்பிட்ட மற்ற பொருட்களை நல்லெண்ணெய் மற்றும் நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். புளியையும் சிறிய சிறிய துண்டுகளாக்கி அதே வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பிறகு எல்லா பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து அத்துடன் புளி, பச்சையாக புதினா, கறிவேப்பிலை சேர்த்து மைப் போல அரைத்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்புப் போட்டு ஒரு கொதி வந்ததும் மேலும் 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி வைக்கவும். பின் கடுகு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

