தேவையானவை:
அவல் - 2 கப்,
புதினா - 1 கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்தது),
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி,
மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் வற்றல் - 6,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புதினாவை நிழலில் உலர்த்தி, கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். அவலை தவிர மற்ற எல்லாவற்றையும் புதினாவுடன் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். அவலை கழுவி, தண்ணீரை வடித்து விட்டு ஒரு நிமிடம் ஊறவிடவும். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அவலை ஒரு நிமிடம் வதக்கி, புதினாப் பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.


