தேவையானவை
கடலை மாவு-அரை கிண்ணம்
அரிசி மாவு -கால் கிண்ணம்
உடைத்த முந்திரி-10
புதினா-1 கப்
நறுக்கிய வெங்காயம்-அரை கிண்ணம்
பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி
பூண்டு விழுது-2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவைக்கேற்ப.
செய்முறை:
புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், உடைத்த முந்திரி, பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை உதிர்த்து பக்கோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான புதினா பக்கோடா தயார்.