தேவையான பொருட்கள்
1கப் தினை அரிசி
1/2 கப் உளுத்தம் பருப்பு
1/4 கப் தேங்காய்
5பல் பூண்டு
1/2 ஸ்பூன் வெந்தயம்
1/2 ஸ்பூன்சீரகம்
2ஸ்பூன் நல்லெண்ணெய்
உப்பு தேவைக்கு
செய்முறை:
தினை அரிசியை 4 வாட்டி கழுகி சுத்தம் செய்து 10நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து உளுத்தம் பருப்பு, வெந்தயதை லேசா வறு த்துக்கவும். கருவிட கூடாது..குக்கரில் தினை அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், தேங்காய், பூண்டு, தேவ யான உப்பு போட்டு 1: 2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும்போது ஸ்டாவ்வ் ஆப் பண்ணிடவும். காரம் தேவை இல்லை. ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வெச்சு சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சாதத்தில் கொட்டவும். சுவையான ஆரோக்கியமான தினை உளுத்தம் சாதம் சுவைக்க தயார்..நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எள்ளு துவயல் தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்.