தேவையானவை
தினை அரிசி - 2 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - முக்கால் கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி.
சில்லி இட்லி தயாரிக்க
பெரிய வெங்காயம் - 2
குடைமிளகாய் - 1
பச்சைமிளகாய் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - கால் தேக்கரண்டி
தக்காளி சாஸ் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: தினை அரிசி, உளுந்து இரண்டையும் நன்கு அலம்பி ஊற வைத்து அரைத்து, புளிக்க வைத்து இட்லியாக சுட்டு எடுத்துக் கொள்ளவும். பின்னர், இட்லியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கிய இட்லி துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து வைக்கவும். அடுத்து மீண்டும் அடுப்பில் வாணலி வைத்து சிறிது எண்ணெயை விட்டுச் சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் குடைமிளகாயும் மிளகாய்த்தூளும் சேர்த்து வதக்கவும். சாஸ் வகைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து கிளறவும். பின்னர், பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கிளறிவிடவும்.