தேவையானவை
சாதம் - 2 கப்
துருவிய மாங்காய் - 1 கப்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை -2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
மாங்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். அரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து சாதமாக, உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து ஆற விடவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளிக்கவும். சிவந்து வந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது மாங்காய்த் துருவலை சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து இறக்கவும். இத்துடன் சாதம், வறுத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்போது மாங்காய் சாதம் ரெடி.