தேவையானவை:
பாசிப்பருப்பு - 50 கிராம்,
மைதா - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
ஓமம், மிளகாய் பொடி, பெருங்காய பொடி - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 200 மிலி.
செய்முறை:
உப்பு, நெய், ஓமம், மிளகாய் பொடி, மைதா மாவு இவற்றுடன் சேர்த்து பாசிப்பருப்பை வேகவிட்டு நன்கு பிசைந்து சிறிய சுண்டைக்காய் அளவு மாவு எடுத்து உருட்டி, உள்ளங்கையால் சற்றே விரலால் அழுத்த பட்டன் வடிவம் வரும். எல்லா மாவையும் இதே போல் உருட்டி, தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான மைதா பாசிப்பருப்பு பட்டன் ரெடி. இதை தனியா பொடித்து போட்ட டீயுடன் பரிமாறவும்.