தேவையான பொருட்கள் 8 ஆட்டுக்கால்கள் 3 பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 பச்சை மிளகாய் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் மிளகுத் தூள் 3 ஸ்பூன் சீரக தூள் 1/2 ஸ்பூன் சோம்பு தூள் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் 1 பட்டை 2 கிராம்பு அரை ஸ்பூன் சீரகம் அரை...
தேவையான பொருட்கள்
8 ஆட்டுக்கால்கள்
3 பெரிய வெங்காயம்
2 தக்காளி
1 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 ஸ்பூன் மிளகுத் தூள்
3 ஸ்பூன் சீரக தூள்
1/2 ஸ்பூன் சோம்பு தூள்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1 பட்டை
2 கிராம்பு
அரை ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் மிளகு
எண்ணெய்
கொத்தமல்லி இலை, கருவேப்பிலை
தண்ணீர்
தேவையானஅளவுஉப்பு
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
ஆட்டுக்காலை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்த ஆட்டுக்காலை குக்கரில் போட்டு மஞ்சள் தூள், ஒரு சிறிய துண்டு இஞ்சியை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். குக்கரை மூடி மிதமான சூட்டில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
அடுத்தது குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, மிளகு சீரகம், கறிவேப்பிலை, தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். சீரகத் தூள், மிளகுத் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கி வேக வைத்த ஆட்டுக்காலை வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கிளறி விடவும்.கொதிவந்தவுடன் குக்கரை மூடி 8 விசில்விசில் விட்டு குகரை இறக்க வேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு மல்லித்தழையை தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் ரெடி.