மில்க் ஃப்ரூட் அவல் சிரியல்
தேவையான பொருட்கள்:
அவல் - ½ கப்
பால் - 1 கப் (கொதிக்க வைத்து குளிர வைத்தது) பழவகைகள் - வாழை, திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெரி
தேன் / பனைவெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் (தேவைப்பட்டால்).
செய்முறை:
அவலை ஒரு 10 நிமிடம் பாலை ஊற்றி ஊறவைக்கவும்.பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி மேலே பரப்பவும்.தேன் அல்லது பனைவெல்லம் சேர்க்கவும்.ஹெல்தி ஃப்ரூட்டி ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி! சிவப்பரிசி, கருப்புக்கவுனி அரிசி அவல்கள் பயன்படுத்த சுவையான டயட் உணவாகவும் இருக்கும்.
அவல் கட்லெட்
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி - சிறிது
உப்பு, மசாலா - தேவையான அளவு
ப்ரெட் கிரம்ஸ் - சிறிது
எண்ணெய் - வறுக்க.
செய்முறை
அவலை நன்கு ஊறவைத்து நசுக்கவும்.உருளைக்கிழங்கு, மசாலா சேர்த்து கலக்கவும்.தேவைப்படும் வடிவில் வடிவமைத்து ப்ரெட் கிரம்ஸில் உருட்டவும்.எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பரிமாறவும்.டீ டைமுக்கு சுவையான ஸ்நாக்ஸ்.
சாம்பார் அவல்
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
சாம்பார் (எஞ்சியதும் கூட பரவாயில்லை) - 1 கப்
காய்கறிகள் - விருப்பப்படி
கொத்தமல்லி - சிறிது.
செய்முறை
அவலை கழுவி 5 நிமிடம் ஊறவைக்கவும்.சாம்பாரில் அவலைச் சேர்த்து கிளறி 2 நிமிடம் நன்கு வேகவைக்கவும்.மேலே கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம். சாம்பார் வடை போல் சாம்பார் அவலும் சுவையாக இருக்கும்.
அவல் சாட்
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
புதினா, கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:
அவலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். (வெறும் வாணலியில்) வெங்காயம், தக்காளி, புதினா, மிளகாய், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சேர்த்து அவலில் கலந்துவிடவும். தேவைப்பட்டால் சாட் மசாலா சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.