தேவையான பொருட்கள்
4 கப்உதிரியாக வடித்த சாதம்
4சாறுள்ள எலுமிச்சம்பழம்
ருசிக்குஉப்பு
1/4 கப்பாதியாக உடைத்த முந்திரி
1 டீ ஸ்பூன்ம.தூள்
1 டீ ஸ்பூன்தாளிக்க:- கடுகு
3/4 ஸ்பூன்க.பருப்பு
3/4 ஸ்பூன்உ.பருப்பு
1டேபிள் ஸ்பூன்நறுக்கின ப.மிளகாய்
1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
1 ஆர்க்குகறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
வறுத்த முந்திரி துண்டுகள்
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.முந்திரியை பாதியாக உடைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். உப்பு போட்டு சாறு எடுத்துக் கொள்ளவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து, முந்திரியை போட்டு நன்கு வறுக்கவும். அடுத்து, ம.தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வறுக்கவும். வடித்த சாதத்தை தட்டில் போட்டு, மேலே 1 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு ஆற விடவும்.
ஆறினதும் வறுத்த தை சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறை ஊற்றவும்.ஊற்றினதும், ஒன்று சேர நன்கு கிளறவும். கிளறினதும் பௌலுக்கு மாற்றி மேலே வறுத்த முந்திரியை வைக்கவும்.இப்போது மிகவும் சுவையான, சுலபமான, சித்ரான்னம் தயார்.