தேவையானவை:
இடியாப்ப மாவு - ¾ கப்,
பாசிப்பருப்பு - ¾ கப்,
வறுத்த கடலைப்பருப்பு - ¼ கப்,
வெல்லம் - ¾ கப்,
நெய் - தேவையான அளவு,
லேசாக நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்,
கெட்டி தேங்காய்ப்பால் - ¼ கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
சுக்குப் பொடி - ½ டீஸ்பூன்,
உப்பு - 2 சிட்டிகை.
செய்முறை:
இடியாப்ப மாவுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து நல்ல சூடான தண்ணீர் விட்டு கரண்டியின் பின் பக்கத்தால் கிளறி, மாவை பெரிய துளை உள்ள இடியாப்ப அச்சில் பிழிந்து வேகவைத்து எடுக்கவும்.பிறகு அதனை தட்டில் கொட்டி, மேலே லேசாக நெய் தடவி நன்கு ஆறியதும் சுமார் 3 சென்டி மீட்டர் துண்டுகளாக வெட்டவும். பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் தேங்காய் துண்டுகளுடன், பருப்புகள் குழைவாகும் வரை வேக வைத்த பின் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அடுத்து இடியாப்ப துண்டுகள், ஏலம், சுக்குப்பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும், தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஸ்டவ்வை அணைத்தால் சுவையான, சத்தான பாயசம் தயார்.
