தேவையான பொருட்கள்
1 கப் பச்சை பயறு
1 பெரிய வெங்காயம்
1 பெரிய தக்காளி
3 பச்சை மிளகாய்
5 பல் பூண்டு
1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் தனியா தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் சீரக தூள்
1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
கறிவேப்பிலை
மல்லி இலை
உப்பு தேவையான அளவு
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
பச்சை பயரை நன்கு வறுத்து கழுவி, குக்கரில் சேர்த்து,மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து எடுக்கவும்.பின்னர் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஸ்டவ்வில் வைத்து வேக வைக்கவும்.வெங்காயம், தக்காளி,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஸ்டவ்வில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம்,பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி,மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.நன்கு வதங்கியதும் எடுத்து வேகும் பச்சை பயரில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.உப்பு சரிபார்த்து,நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் பச்சை பயறு மசியல் தயார்.மிகவும் சத்தான இந்த பச்சை பயறு மசியல் சூடான சாதம்,சப்பாத்தியுடன் சேர்த்து,கொஞ்சம் நெய் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.