தேவையானவை:
ஊறவிட்டு வடித்த பச்சைப்பயறு - ¼ கிலோ,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
இஞ்சி - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 3,
பூண்டு - 4 பல் இடித்தது,
சோம்பு - ½ டீஸ்பூன்,
நறுக்கிய மல்லி - ¼ கப்.
எண்ணெய் - 200 மிலி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஊறிய பச்சைப்பயரை உப்பு, இஞ்சி, பச்சை மிளகாயுடன் நன்கு மெத்தென்று நீர் தெளித்து வடை பதத்திற்கு அரைத்து இடித்த பூண்டு, சோம்பு, நறுக்கிய வெங்காயம், மல்லி சேர்த்து சூடான எண்ணெயில் சிறிய பக்கோடாக்களாக உருட்டி சிவந்த பின் எடுத்து, ஏலக்காய் டீயுடன் பரிமாறவும்.