Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசாணிக்காய் (சிவப்பு பூசணி) அடை

தேவையானவை:

துருவிய சிவப்பு பரங்கிக்காய் - 1 கப்,

பச்சரிசி - 200 கிராம்,

துவரம் பருப்பு - 50 கிராம்,

சீரகம், சோம்பு கலந்து - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 5, மல்லி,

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,

உப்பு - தேவையான அளவு,

வறுத்து எடுக்க தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு,

பெருங்காயப்பொடி- ½ டீஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசி, துவரம் பருப்பு களைந்து 1 மணி நேரம் ஊறவிட்டு உப்பு, மிளகாய், சீரகம், சோம்பு, மல்லி, கறிவேப்பிலை சேர்த்து நறநறவென அரைத்து வழித்து, துருவிய அரசாணிக்காய் சேர்த்து நன்கு கலந்து 1 மணிநேரம் புளிக்க விட்டு, தேங்காய் எண்ணெய் விட்டு அடை வார்த்து பரிமாறவும். இதற்கு தொட்டுக் கொள்ள - காரச் சட்னி, தேன், வெல்லப்பாகு.