தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா 50 கிராம்,
வரமிளகாய் - 5,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
கோஸ் - 50 கிராம்,
புளிக் குழம்புத் தூள் - 1 ஸ்பூன்,
பூண்டு - 1,
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நீரில் ஊற வைத்து கொரகொரப்பாக மிளகாய் போட்டு அரைக்கவும். வெங்காயம், கோஸ், மல்லித்தழை பொடியாக நறுக்கவும். புளி, உப்பு, குழம்புத் தூள் கரைக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு வதக்கி, குழம்பு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். அரைத்து வைத்த மாவில் கோஸ் கலந்து உருண்டையாக பிடித்து, குழம்பில் போட்டு, வெந்தவுடன் தேங்காய்ப்பால் விட்டு பெருங்காயம் போட்டு, மல்லித் தழை போட்டு இறக்கவும்.


