தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ (பாறை மீன்)
பச்சை பட்டாணி - 50 கிராம்
பிரக்கோலி - சிறு துண்டு
காலிபிளவர் - சிறு துண்டு
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1/2
ஸ்வீட் கார்ன் - 50 கிராம்
தைம் - ஒரு சிட்டிகை
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இடித்த மிளகாய் வற்றல் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதன் மீது உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து வெண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு மீன் துண்டுகளை சேர்த்து அனலைக் குறைத்து உப்பு சேர்த்து வேக விடவும். வேறு ஒரு வாணலியில் பச்சை பட்டாணி, புரோக்கோலி, காலிபிளவர், வெங்காயம், குடைமிளகாய் மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் வேக வைத்த மீனில் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சுண்டி வரும் போது அடுப்பை அனைத்து மிளகுத் தூள், தைம் மற்றும் இடித்த மிளகாய் வற்றல் சேர்த்து கிளறவும். சுவையான, ஆரோக்கியமான மீன் சாலட் தயார்.