தேவையான பொருட்கள்
1/2 கப்தோல் நீக்கிய மீன் துண்டுகள்
1/2 கப்தேங்காய் துருவல்
1/4 கப்பொட்டுக்கடலை
5பச்சை மிளகாய்
1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
1/4 டீஸ்பூன்கசகசா
1/2 டீஸ்பூன்சோம்பு
கொஞ்சம்கறிவேப்பிலை
2 டீஸ்பூன்நல்லெண்ணெய்
தேவையான அளவுஉப்பு
தேவையான அளவுஎண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
தேங்காய், மீன் துண்டுகள், சோம்பு, கசகசா, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் நல்லெண்ணெய் விட்டு பிசறி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான மீன் கோலா உருண்டை ரெடி.
