Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெந்தய முப்பருப்பு குழம்பு

Fenugreek gravyதேவையானவை:

முழு வெந்தயம் - 2 டீஸ்பூன்,

கடலைப்பருப்பு,

பாசிப்பருப்பு,

துவரம் பருப்பு - எல்லாம் சேர்ந்து ½ ஆழாக்கு,

பூண்டு - 4 பற்கள்,

சின்ன வெங்காயம் - 10,

தக்காளி - 3,

பச்சைமிளகாய் - 2,

மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,

மஞ்சள் பொடி - சிறிது,

உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்,

கடுகு,

வெந்தயம் - தலா ½ டீஸ்பூன்,

பெருங்காயம் - சிறிது,

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை தாளித்து, உடன் முழு

வெந்தயம், பருப்பு வகைகள், மஞ்சள் பொடி, உப்பு, சின்ன வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து 200 மிலி நீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசிலில் நிறுத்தி, நன்கு மசித்து சூடான வெந்தய முப்பருப்பு குழம்பை பரிமாறவும்.