Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முட்டை மக்ரோனி

தேவையான பொருட்கள்

3 மேஜைக்கரண்டி எண்ணெய்

1 கப் நறுக்கிய வெங்காயம்

2 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது

2 கப் அரைத்த தக்காளி

1 1/2 மேஜைக்கரண்டி உப்பு

1 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்

1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்

2 மேஜைக்கரண்டி கொத்தமல்லித் தூள்

1 மேஜைக்கரண்டி பட்டை கிராம்புத்தூள்

2 கப் மக்ரோனி

3 முட்டை.

செய்முறை

முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை நன்றாக தாளிக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். கடைசியாக தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டை கிராம்புத்தூள் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும். பின்பு தண்ணீர் மற்றும் மக்ரோனியை சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 15 நிமிடம் சிம்மில் வேக விடவும். பின்பு குக்கரை திறந்து முட்டையை உடைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான முட்டை மக்ரோனி தயார்.