தேவையான பொருட்கள்
சுக்கு - சிறிதளவு
புதினா - ஒரு கைப்பிடி
தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து தனியா, சீர்கம், ஓமம் ஆகியவற்றை தனித் தனியாக மிதமான தீயில் லேசாக வறுக்கவும். சுக்கு, புதினாவுடன் வறுத்தவைகளை சேர்த்து அரைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்ததைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். 5 நிமிடம் கொதித்ததும் வடிகட்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து சிறிது ஆற விட்டு தேன் கலந்து பருகலாம். சுவையான ஜீரண தேனீர் தயார்.
