தேவையானவை:
பேரீச்சம் பழம் - 250 கிராம் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது),
கடலைப்பருப்பு - ¾ கப்,
உருக்கிய நெய் - ½ கப்,
பாதாம் - 8,
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,
பால் - 2½ கப்.
செய்முறை:
கடலைப்பருப்பை ¾ மணி நேரம் ஊறவைத்து, வடித்து அடிகனமான வாணலியில் 2 கப் பால் சேர்த்து வேகவைத்து அரைக்கவும். பேரீச்சையை ½ கப் சூடான பாலில் ஊறவைத்து அதே பாலுடன் விழுதாக அரைக்கவும். ½ கப் நெய்யை வாணலியில் விட்டு பாதாம் பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதில் பருப்புக் கலவை, பேரீச்சைக் கலவையைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பிறகு அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும். சுவையான பேரீச்சை, கடலைப்பருப்பு அல்வா தயார்.