தேவையானவை
கறிவேப்பிலை - 1 கப்
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு - கால் கப்
வரமிளகாய் - 10
பெருங்காயம் - 1 துண்டு
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு பருப்பு, மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். கறிவேப்பிலையை நன்றாக அலசி துணியில் போட்டு ஆறவிடவும். பின் வாணலி சூடானதும் அதில் கறிவேப்பிலையை போட்டு வறுத்து எடுக்கவும். ஆறியதும் மேலே வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.