தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
கறிவேப்பிலை - அரை கப்
கொத்தமல்லி தழை - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - 1 கைப்பிடி
ப.மிளகாய் - 3
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், சிறிது உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்சி ஜாரில் திக்கான பதத்தில் அரைத்து கொள்ளவும்.* அரைத்த விழுதை தோசை மாவில் கலந்து கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.சத்தான சுவையான கறிவேப்பிலை தோசை ரெடி.