Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீரகத் துவையல்

தேவையானவை:

சீரகம் - 1½ டீஸ்பூன்,

சிவப்பு மிளகாய் - 6,

உளுந்து - 2 டீஸ்பூன்,

வெந்தயம் - ¼ டீஸ்பூன்,

கடுகு - ¼ டீஸ்பூன்,

வெங்காயம் - 1 அரிந்தது,

புளி - சிறிதளவு,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய், உளுந்து வறுத்து கடைசியில் வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கி, ஆறியபின் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.