தேவையான பொருட்கள்
½ கப் நெய்
¾ கப் சீரக சம்பா
¼ கப் பயத்தம் பருப்பு
6 கப் பால்
2 தேக்கரண்டி குங்குமப்பூ
1தேக்கரண்டி ஏலக்காய் பொடி
1கப் பொடித்த வெல்லம்
சிட்டிகை உப்பு
30 முந்திரி
¼ கப் உலர்ந்த திராட்சை
சக்கரை பொங்கல்
சமையல் குறிப்புகள்
குங்குமப்பூவை ஒரு சிறிய கிண்ணத்தில் மேஜை கரண்டி வெந்நீரில் ஊறவைக்க. கரைந்து சிகப்பு நிறமாகும் மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேன் வைக்க’ 1 மேஜை கரண்டி சேர்க்க. உறுகியவுடன் நெருப்பை குறைத்து சீரக சம்பா, பயத்தம் பருப்பு லேசாக வாசனை வரும்வரை வறுக்க. வறுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் 2 கப் பால் + 1 கப் நீருடன் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. மிதமான நெருப்பின் மேல் வெல்லம் 1 கப் நீருடன் ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்க வைக்க. வேகவைத்த அரிசி கலவை சேர்க்க. நன்றாக கொதிக்கட்டும். சிட்டிகை உப்பு சேர்த்து கிளற 1 கப் பால் சேர்க்க குங்குமப்பூ சேர்க்க. பால் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. அடிபிடிக்காமல் இருக்க. கிளறிக்கொண்டே இருக்க. நெருப்பை குறைக்க. பால் பொங்கட்டும். சிறு துருவியை பாத்திரத்தில் மேல் வைத்து ஃபிரெஷ்ஆக ஜாதிக்காய், அதிமதுரம் துருவுக. அடுப்பை அணைக்க. சக்கரை பொங்கல் தயார், ¼ கப் நெய்யில் முந்திரி, திராட்சை குறைந்த நெருபின் மேல் ஸ்கிலேட் வைத்து வறுக்க; பின் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க, 1 நிமிடம். வறுத்த பொருட்களை சக்கரை பொங்கல் கூட சேர்க்க, கிளற. மீதி நெய்யும் சேர்த்து கிளற. சுவையான அழகிய சக்கரை பொங்கல் ருசி பார்த்து சுவைக்க தயார். பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. எல்லோரோடும் பகிர்ந்து பண்டிகை கொண்டாடுக.