Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 கிலோ

காய்ந்த மிளகாய் - 5

பச்சை மிளகாய் - 5

எலுமிச்சை - 1

கரம் மசாலா 2 ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை

முதலில் காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக அரைத்து கொள்ளவும். அதன்பின், சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்துப் பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும், வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார்.