தேவையான பொருட்கள்
ஊற வைக்க
ஆனியன் பவுடர் - 1 டீஸ்பூன்
மைதா - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பால் - தேவையான அளவு
மைதா - தேவையான அளவு
குளிர்ச்சியான தண்ணீர் - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு- 1 டீஸ்பூன்
கார்லிக் பவுடர்- 1 டீஸ்பூன்.
செய்முறை
சிக்கனை 4 மணி நேரம் ஊற வைக்கவும். மைதா மாவில் உப்பு, மிளகுத்தூள், கார்லிக் பவுடர், ஆனியன் பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து மைதாவில் பிரட்டி, ஐஸ் வாட்டரில் முக்கி எடுத்து திரும்பவும் மைதாவில் நன்கு பிரட்டி உதறி நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதை சாஸூடன் பரிமாறவும்.