தேவையான பொருட்கள்
4நண்டு
இரண்டு தக்காளி
50சின்ன வெங்காயம்
பூண்டு
பச்சை மிளகாய்
சிறிதளவுபுளி
2 டேபிள் ஸ்பூன்சீரகம்
இரண்டு டேபிள் ஸ்பூன்மிளகு
இரண்டு டேபிள் ஸ்பூன்வர மல்லி
கருவேப்பிலை
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு
தேவையானஅளவு எண்ணெய்
செய்முறை:
முதலில் நண்டை சிறிய சிறிதாக கையால் உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு சிறிதளவு புலியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் மிளகு வர மல்லி பூண்டு சிறிதளவு கருவேப்பிலை பச்சை மிளகாய் அரை தக்காளி சிறிது மஞ்சள் தூள் இதனை அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம் நன்கு பொறிந்த பிறகு கருவேப்பிலை சிறிதளவு சின்ன வெங்காயத்தை தட்டி சேர்த்துக் கொள்ளவும் வாசனையாக இருக்கும் அதே போல் சிறிதளவு பூண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும் இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு அதை தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு நாம் மறைத்து வைத்த ரசம் மசாலாவை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வேண்டும். பிறகு நாம் தட்டி வைத்துள்ள நண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் அப்படியே விட வேண்டும் புளிக்கரைச்சலை சேர்த்து ரசம் பொங்கிவரும் பக்குவத்தில் மல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும் சுவையான நண்டு ரசம் தயாராகியுள்ளது.