தேவையான பொருட்கள்
250கிராம் நாட்டுக் கோழி
1/2கப் நறுக்கிய சாம்பார் வெங்காயம்
1பெரிய தக்காளி
1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1ஸ்பூன் மிளகாய் தூள்
1ஸ்பூன் தனியாத் தூள்
1ஸ்பூன் மிளகுத் தூள்
2ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவுபுதினா
1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
செய்முறை
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.அதனுடன் புதினா சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.அத்துடன் மிளகாய் தூள், தனியாத் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.. வதங்கியதும் கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.இப்போது சுவையான சத்தான நாட்டுக் கோழி சூப் தயார்


