தேவையான பொருட்கள்
2கப் நாட்டு சோளம்
2 கப் இட்லி அரிசி
50 கிராம் குண்டு உளுத்தம்பருப்பு
1டீஸ்பூன் வெந்தயம்
தேவையானஅளவு உப்பு
100கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
1 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
1டீஸ்பூன் சீரகம்
2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
சிறிதளவுபொடியாக கட் செய்த கறிவேப்பிலை
தேவையானஅளவு எண்ணெய்
செய்முறை
இட்லி அரிசி, சோளம் சேர்த்து 6மணி நேரம் ஊற வைக்கவும். பின் நன்கு கழுவி கரகரப்பாக அரைத்து வைக்கவும்.இதனுடன் 1/2 மணி நேரம் ஊற வைத்த உளுத்தம்பருப்பு, வெந்தயம் அரைத்து சோளமாவுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து 8மணி நேரம் புளிக்க வைக்கவும். சற்று கெட்டியாக இருக்கட்டும்.
இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி மாவில் கலந்து பணியாரம் சுட்டு எடுக்கவும். சட்னி, சாம்பார் உடன் மிக அருமை.
