தேவையானவை:
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்,
பச்சரிசி - 1½ கப்,
புளி - பாதி எலுமிச்சை அளவு,
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை,
பெருங்காயம் - ½ டீஸ்பூன்,
பூண்டு - 6 பல்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி போட்டு 3 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வேகவைக்கவும். அரிசி நல்லா வெந்த பின் கொத்தமல்லி தழை, மிளகாய் பொடி, மஞ்சள், பெருங்காயம், பூண்டு, உப்பு போட்டு கிளறவும். கடைசியில் புளியைக் கரைத்து ஊற்றி சிறிது நேரம் சிறுதீயில் வேகவிட்டு நன்றாக கிண்டி இறக்கவும். இது சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.