தேவையான பொருட்கள்
2 கப் - துருவிய தேங்காய்
1½ கப் - சர்க்கரை
2 ஸ்பூன் - நெய்
1/4 தேக்கரண்டி - ஏலக்காய் தூள்.
செய்முறை
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு அதில் தேங்காய்த்துருவலை நிறம் மாறாமல் வறுக்கவும். தேங்காய் வறுத்த உடன் சர்க்கரை சேர்த்து சிறு தீயில் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். பின், சர்க்கரை சுருண்டு தேங்காயுடன் கலந்து ஓரங்கள் விட்டு வரும் நேரத்தில் ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டவும். இதனை கொஞ்ச நேரம் ஆற விட்டு துண்டுகளாக வெட்டி எடுத்தால் சுவையான தேங்காய் பர்பி ரெடி.