தேவையான பொருட்கள்
4நெய் மீன் துண்டுகள் -
சிறிய எலுமிச்சை அளவுபுளி -
2 சிறியதக்காளி -
2 சிறியபச்சை மிளகாய் -
3 பற்கள்பூண்டு -
2 தேக்கரண்டிமசாலா தூள் -
1 தேக்கரண்டிசோம்பு தூள் -
½ தேக்கரண்டிமஞ்சள் தூள் -
தேவையான அளவுஉப்பு -
1 குழிக்கரண்டிநல்லெண்ணெய் -
தலா ஒரு தேக்கரண்டிகடிகு + வெந்தயம் -
ஒரு பெரியதுபல்லாரி வெங்காயம் -
சிறிதளவுகறிவேப்பிலை -
½ கப்தேங்காய் பால் - கட்டி பால்
1 கப்தேங்காய் பால் - தண்ணி பால்
செய்முறை:
மேலே குறிப்பிட்ட அளவு நெய் மீன் துண்டுகளுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சோம்பு தூள் மற்றும் மசாலா தூள் சேர்த்து பிரட்டி வைத்துக்கொள்ளவும். பின்பு அத்துடன் கரைத்து வடிகட்டிய புளி கரைசலை ஊற்றி விட்டு, ஒரு சிறிய தக்காளி அந்த கரைசலில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு மண் சட்டியை அடுப்பில் ஏற்றி அது நன்றாக காய்ந்த பின்னர் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய் ஊற்றி. எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து பின்பு நறுக்கிய வெங்காயம் சிறிதளவு சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும் அதில் தட்டிய பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக மாறியதும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் இந்த தாளிப்பை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு எண்ணெய் இல்லாத அதே மண் சட்டியில் நறுக்கிய பாதி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் மீன் கரைசலை ஊற்றி, தண்ணி பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும். குழம்பு சிறிது கெட்டியாகி மீன் துண்டுகள் அரைவாசி வெந்ததும் ½ கப் கெட்டி தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும், எடுத்து வைத்த தாளிப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு இறக்கவும்.சுவையான மண்சட்டி நெய் மீன் குழம்பு தயார். மிகவும் ருசியாக இருக்கும் இந்த நெய் மீன் குழம்பு.மீதம் உள்ள குழம்பை அதே சட்டியில் வைத்து மறுநாள் வற்ற வைத்து சூடு செய்தால் மேலும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.இதை செய்து பார்த்து அசத்துங்கள்.
