தேவையான பொருட்கள்
மைதா-1 கப்
சர்க்கரை-1 கப்
கோக்கோ பவுடர்-1/2 கப்
பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1 டீஸ்பூன்
உப்பு-1/2 டீஸ்பூன்
முட்டை-1
பால்-1/2 கப்
எண்ணெய்-1/4 கப்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன்
சூடு தண்ணீர்-1/2 கப்
கிரீம் செய்வதற்கு:
வெண்ணெய்-1/2 கப்
பொடித்த சர்க்கரை-1 கப்
கோக்கோ பவுடர்-3/4 கப்
பால்-1/3 கப்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பௌலில் முட்டை, பால்,எண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து 2-3நிமிடம் வரை பீட் செய்து கொள்ளவும்.பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.கடைசியில் சூடு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.கப் கேக் மௌலடில் ஊற்றவும்.முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 20-25 நிமிடம் வரை(180 டிகிரி)வைத்து எடுக்கவும்.ஒரு பௌலில் வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக பொடித்த சர்க்கரை,கோக்கோ பவுடர் மற்றும் பால் சேர்த்து மறுபடியும் கிரீமி ஆகும் வரை பீட் செய்யவும்.கேக் ஆறியதும், பைபிங் பேப்பரில் கிரீமை சேர்த்து எல்லா கேக்கையும் அலங்கரிக்கவும்.
