தேவையான பொருட்கள்:
குடைமிளகாய், வெள்ளரிக்காய்,
கேரட் - தலா ஒன்று
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெள்ளரிக்காய், கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய்களை எல்லாம் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் மிளகுத்தூள், சாட் மசாலா, சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் பரிமாறவும்.


