தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ (எலும்பு இல்லாதது)
கடலை மாவு - ஒரு கைப்பிடி
அரிசி மாவு - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
சிறு கீரை - ஒரு கைப்பிடி
முந்திரி - 10
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
சிக்கனை நன்கு கழுவி மிளகாய் தூள்,மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய சிறு கீரை, முந்திரி, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான சிக்கன் கீரை பக்கோடா தயார்.



