தேவையான பொருட்கள்
1 கிலோசிக்கன்
3வெங்காயம்
2தக்காளி
2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
2 ஸ்பூன்சோம்பு
1பட்டை
சிறிதளவுகறிவேப்பிலை
1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
2 ஸ்பூன்மல்லி தூள்
3 ஸ்பூன்சிக்கன் மசாலா
1 ஸ்பூன்கரம் மசாலா
1 ஸ்பூன்காஷ்மீர் மிளகாய்த்தூள்
தேவையான அளவுஉப்பு
சிறிதளவுகொத்தமல்லி
1/2 கப்தேங்காய் துருவல்
5முந்திரி பருப்பு
1 ஸ்பூன்மிளகு
1 ஸ்பூன்சீரகம்
1 ஸ்பூன்கசகசா
தேவையான அளவுதண்ணீர்
2 மேசைக்கரண்டிஎண்ணெய்
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு 1 ஸ்பூன், பட்டை வதக்கி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் சிக்கனை இதில் சேர்த்து உப்பு போட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.பச்சை வாசனை போனதும் மிளகாய்தூள், மல்லி தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக வைக்கவும். சிக்கனில் தண்ணீர் விட்டு வந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.பிறகு தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு,சோம்பு 1 ஸ்பூன், சீரகம், மிளகு, கசகசா தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பேஸ்ட் ஐ சிக்கனில் சேர்த்து கலந்து விடவும்.பிறகு 5 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து இறக்கவும். சுவையான சிக்கன் சால்னா தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.