Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

செட்டிநாடு சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்

100 கிராம் சிக்கன் சிறிய அளவில் கட் செய்தது

2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த வெங்காயம்

2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த தக்காளி

1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1/2 டீஸ்பூன் தனியாத்தூள்

1/4 டீஸ்பூன் சீரகத்தூள்

1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்

2 சிட்டிகை மிளகாய் தூள்

சிறிதளவுமஞ்சள்தூள்

தேவையானஅளவு உப்பு

1டீஸ்பூன் அளவு பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை

சிறிதளவுகொத்தமல்லித்தழை தண்டு

2டீஸ்பூன் நல்லெண்ணெய்

சிறியபிரியாணி இலை

1 ஏலக்காய்

1சிறு துண்டு பட்டை

1 இலவங்கம்

செய்முறை

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து, பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.இதில் தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து சேர்த்து வதக்கவும். பின் சிக்கன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி சிம்மில் 4 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் அடுப்பை அணைக்கவும். பின்னர் மூடியைத் திறந்து 600 மிலி தண்ணீர், கொத்தமல்லி தண்டுசேர்த்து சிம்மில் வைத்து கொதித்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.